20/01/2022

தமிழ் இலக்கணம்

 மாத்திரை எடுத்துக்காட்டு

உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை 

உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை

உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை 

உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை 

குறில் மாத்திரை அளவு - 1 மாத்திரை (எ.கா: அ, இ, ப, கி, மு)

நெடில் மாத்திரை அளவு - 2 மாத்திரை (எ.கா: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)

மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் மாத்திரை அளவு - அரை மாத்திரை

குற்றியலிகரம், குற்றியலுகரம் மாத்திரை அளவு - அரை மாத்திரை

 அளபெடை எழுத்துகளின் மாத்திரை - இரண்டிற்கு மேல்

' ஐ' மாத்திரை அளவு - 2 

ஐகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒரு மாத்திரை, ஒன்றரை மாத்திரை

'ஔ' மாத்திரை அளவு - 2 

 ஒளகாரக்குறுக்கம்  மாத்திரை அளவு - ஒன்றரை மாத்திரை

 'ம்' மாத்திரை அளவு - அரை மாத்திரை

 மகரக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை 

 ஆய்த எழுத்து 'ஃ' மாத்திரை அளவு - அரை மாத்திரை

 ஆய்தக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை 

உயிரளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும். 

ஒற்றளபெடை மாத்திரை - இரண்டிற்கு மேல் வரும்.


குறில்

ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துகள் குறில் என்று அழைக்கப்படும்.

குறில் உயிர் எழுத்துகள் அ, இ, உ, எ, ஒ

என்பன.


நெடில்

ஒரு எழுத்து தான் ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அது நெடில் என்று அழைக்கப்படும். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ஆகியவை நெடில் எழுத்துகள் ஆகும்


ஒற்று

ஒலிப்பதற்கு அரை மாத்திரை நேரமே எடுக்கும் எழுத்துகள் ஒற்று என்று அழைக்கப்படுகிறன.”ஃ

” ஒற்று ஆகும்

உயிர்மெய் எழுத்துக்கள்

    தமிழ் மொழியிலே உயிர் ஒலிகளைக் குறிக்கத் தனி எழுத்துக்களும் மெய் ஒலிகளைக் குறிக்கத் தனி எழுத்துக்களும் உள்ளன. இவற்றை மேலுள்ள விளக்கத்தின் மூலமாக அவதானித்தோம். இவ்வாறான உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து கூட்டு ஒலிகளாக புதிய ஒலிகளைத் தருகின்றன. அவற்றையே உயிர்மெய் எழுத்துக்கள் என அழைக்கின்றறோம். உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 ஆகும். 


உதாரணம் 


            க் + அ = க 


            த் + உ = து 


உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு உயிர்மெய் குறில் எழுத்துக்கள் என்றும் உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் என்றும் இரு நோக்கப்படுகிறது.

உயிர்மெய் குறில் எழுத்துக்கள்

 குறுகிய ஓசையை உடைய உயிர் எழுத்துக்கள் ஐந்தும் மெய் எழுத்துக்களாகிய 18 எழுத்துக்களுடன் இணைவதால் உருவாகும் எழுத்துக்களே உயிர்மெய் குறில் எழுத்துக்கள் எனப்படுகின்றன. உயிர்மெய் குறில் எழுத்துக்களுக்கு மாத்திரை அளவு 01 ஆகும்.. தமிழில் 90 உயிர்மெய் குறில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக இங்கு தமிழ் நெடுங்கணக்கின் ககர வரிசையை நோக்குவோம்.


            அ, இ, உ, எ, ஒ 


க் க , கி, கு, கெ, கொ 


இங்கு அ, இ, உ, எ, ஒ போன்ற உயிர் எழுத்துக்களுடன் க் என்ற மெய் எழுத்து இணைவதால் க , கி, கு, கெ, கொ போன்ற ககர வரிசையின் உயிர்மெய் குறில் எழுத்துக்கள் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.

உயிர்மெய் நெடில் எழுத்துக்கள்

    நீண்ட ஓசையை உடைய உயிர் எழுத்துக்கள் ஏழும் மெய் எழுத்துக்களாகிய 18 எழுத்துக்களுடன் இணைவதால் உருவாகும் எழுத்துக்களே உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எனப்படுகின்றன. உயிர்மெய் நெடில் எழுத்துக்களுக்கு மாத்திரை அளவு 02 ஆகும்.. தமிழில் 126 உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக இங்கு தமிழ் நெடுங்கணக்கின் ககர வரிசையை நோக்குவோம்.


             ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள               


க் கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ 


இங்கு ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள போன்ற உயிர் எழுத்துக்களுடன் க் என்ற மெய் எழுத்து இணைவதால் கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ போன்ற ககர வரிசையின் உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் உருவாக்கம் பெற்றிருக்கின்றன.

ஆய்த எழுத்து 

    முக்கோண அமைப்பிலுள்ள மூன்று புள்ளி கொண்ட எழுத்து ஆய்த (ஆய்தம்) எழுத்து எனப்படுகிறது. ஆய்த எழுத்தானது தனிக் குற்றெழுத்துக்கும் வல்லினத்துக்கும் இடையே ஆய்தம் வரும் என இலக்கண நூல்கள் கூறுகின்றன. ஆய்த எழுத்து மெய் எழுத்தைப் போன்று ஒலிப்பதனால் இதற்கும் மாத்திரை 1/2 (அரை மாத்திரை) ஆகும்.


உதாரணம் - ஃ

            அஃது, இஃது, அஃறிணை, எஃகு


    மேற்படி சொற்களில் முதல் எழுத்துக்களான அ, இ, எ போன்றன குறில் எழுத்துக்களாகும். து, றி, கு என்பன வல்லின மெய்களைக்கொண்ட எழுத்துக்களாகும். ஆகவே குறில் எழுத்துக்களுக்கும் வல்லின மெய் எழுத்துக்களுக்கும் இடையே ஆய்தம் செயற்படுவதை அவதானிக்கலாம்.


தமிழில் எழுத்தானது இரண்டு வகைப்படும். அவை முதலெழுத்து, சார்பெழுத்து ஆகும்.சார்பு எழுத்துக்கள் என்றால் முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் ஆகும்.


சார்பு எழுத்துக்கள் வகைகள் மொத்தம் - பத்து

அவையாவன,


 உயிர்மெய்

 ஆய்தம்

 உயிரளபெடை

 ஒற்றளபெடை

 குற்றியலிகரம்

 குற்றியலுகரம்

 ஐகாரக்குறுக்கம்

 ஔகாரக்குறுக்கம்

 மகரக்குறுக்கம்

 ஆய்தக்குறுக்கம்




அளபெடை என்றால் என்ன?
அளபெடை என்பது செய்யுளில் ஓசை குறையும்போது, ஒரு சொல்லின்முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும். அவ்வாறு நீண்டு ஒலிப்பதனை அளபெடை என்கிறோ
ம்

ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?
'ஐ' மாத்திரை அளவு - 2
'ஐ' என்னும் நெட்டெழுத்தைத் தனியாக ஒலித்துப் பாருங்கள். அது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும்.

ஐகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒரு மாத்திரை, ஒன்றரை மாத்திரை
ஐகாரக்குறுக்கம் எடுத்துக்காட்டு
ஐம்பது - சொல்லுக்கு முதலில் வந்து ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது
தலைவன் - சொல்லுக்கு இடையில் வந்து ஒரு மாத்திரையாகக் குறைந்தது
கடலை,வேட்கை - சொல்லுக்கு ஈற்றில் வந்து ஒரு மாத்திரையாகக் குறைந்தது
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை- 'ஐ' சொல்லுக்கு ஈற்றில் வந்து ஒரு மாத்திரை
இவ்வாறு சொல்லுக்கு முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களில் வரும் ஐகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

ஒளகாரக்குறுக்கம் என்றால் என்ன?
'ஔ' மாத்திரை அளவு - 2
'ஔ' என்னும் நெடில் எழுத்தும், 'ஐ' என்னும் நெட்டெழுத்தைப்போலவே தனியாக ஒலிக்கும்போது, இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பதில்லை.

ஒளகாரக்குறுக்கம் மாத்திரை அளவு - ஒன்றரை மாத்திரை
சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம் ஒன்றரை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்.
சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் ஒளகாரம் வாராது.
அதுவே ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

ஒளகாரக்குறுக்கம் எடுத்துக்காட்டு
ஒளவை, வௌவால் - ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது.

மகரக்குறுக்கம் என்றால் என்ன
'ம்' மாத்திரை அளவு - அரை மாத்திரை
மகரக்குறுக்கம் மாத்திரை அளவு - கால் மாத்திரை
‘ம்' என்னும் மெய்யெழுத்து தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும். அதாவது, 'ம்' என்னும் மெய்யெழுத்து, செய்யுளில் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து, கால் மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.

இரண்டு இடங்களிலும் குறைந்து ஒலிக்கும் மகரமே மகரக்குறுக்கம்.
இடம் 1
செய்யுளில் இடம்பெறும் போலும், மருளும் ஆகிய மகர ஈற்றுச் சொற்கள்,ஈற்றயல் உகரங் கெட்டு, போல்ம், மருள்ம் என்றாகிப் பின் போன்ம், மருண்ம் எனத் திரியும். இவ்வாறு திரியும் னகர, ணகரங்களின் முன்னுள்ள மகரம், தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்.

மகரக்குறுக்கம் எடுத்துக்காட்டு
போலும் - போல்ம் - போன்ம், 
மருளும் - மருள்ம் - மருண்ம்

ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?
'ஃ' மாத்திரை அளவு - அரை மாத்திரை
ஆய்தக்குறுக்கம் மாத்திரை அளவு -கால் மாத்திரை
ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக்குறுக்கம். ( 'ஃ' என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பது.)

நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகரங்கள் வருமொழியிலுள்ள தகரத்தோடு (த்) சேரும்போது ஆய்தமாகத் திரியும். இவ்வாறு திரிந்த ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். அதுவே ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

ஆய்தக்குறுக்கம் எடுத்துக்காட்டு
வருமொழியிலுள்ள தகரம் (த்) நிலைமொழிக்கேற்ப றகரமாக (ற்) வும், டகரமாகவும் (ட்) மாறிப் புணரும்.
கல் + தீது = கஃறீது, (வருமொழி - கல்) (நிலைமொழி -தீது )
முள் + தீது = முஃடீது.





No comments:

Post a Comment

THANKS FOR READING MY POSTS. FOLLOW MY BLOG AND SHARE YOUR FRIENDS